ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

பொம்மிடியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-08-26 15:52 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடியில் உள்ள ஒரு ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு திடீரென அலாரம் ஒலித்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் நவநீத கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அவர் வங்கிக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். அப்போது, மர்ம நபர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதால் அலாரம் ஒலித்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் பொம்மிடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த கொள்ளை முயற்சியில் மெனசியை சேர்ந்த மைதீன் மகன் முகமது அலி (வயது25) ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்