பெண்ணை பலாத்கார செய்ய முயன்ற வழக்கு: தொழிலாளிக்கு 1¾ ஆண்டு சிறை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணை பலாத்கார செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 1¾ ஆண்டு சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.;

Update: 2022-12-22 22:09 GMT

ஏற்காடு ஒண்டிக்கடை கிளியூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீராம் (வயது 44). தர்மபுரி மாவட்டம் குள்ளனூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சிவசுப்பிரமணியம் (57). இருவரும் நண்பர்கள் ஆவர். கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி அவர்கள் இருவரும் ஏற்காட்டை சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவருடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனர். இதையடுத்து ஸ்ரீராம், சிவசுப்பிரமணியம் ஆகிய இருவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அந்த பெண் கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அவர்கள் அந்த பெண்ணை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுதொடர்பாக ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீராம், சிவசுப்பிரமணியம் ஆகியோரை கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் மாவட்ட முதன்மை கோர்ட்டில் நடந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ஸ்ரீராம் திடீரென இந்த வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதனால் இந்த வழக்கை பிரித்து நடத்தினர். இந்தநிலையில் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் பெண்ணை பலாத்கார செய்ய முயன்ற குற்றத்திற்காக சிவசுப்பிரமணியத்துக்கு 21 மாதம் (1¾ ஆண்டுகள்) சிறை தண்டனை விதித்து நீதிபதி கலைமதி தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்