குலசேகரம்-திருவரம்பு சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மறியல் செய்ய முயற்சி

குலசேகரம்-திருவரம்பு சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் செய்ய முயன்றனர்.

Update: 2022-09-26 18:48 GMT

திருவட்டார்,

குலசேகரம்-திருவரம்பு சாலையை விரிவாக்கம் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் செய்ய முயன்றனர்.

மறியல் செய்ய முயற்சி

குலசேகரம்-திருவரம்பு சாலையை விரிவாக்கம் செய்வதற்கு தமிழக அரசு ரூ.3.15 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. இந்த நிலையில் சாலைப் பணிகளை உடனே தொடங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் திருவரம்பு, நாகக்கோடு, அரமன்னம் கிளை சார்பில் நேற்று காலையில் திருவரம்பு தபால் நிலையம் சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்த முயன்றனர்.

போராட்டத்தை விளக்கி வட்டார செயலாளர் வில்சன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்தாஸ், குலசேகரம் வட்டார செயலாளர் விஸ்வம்பரன், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ் ஆகியோர் பேசினர். இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 15 நாட்களுக்கு சாலையை அகலப்படுத்தி கருந்தளம் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்