தொழிலாளியை கொல்ல முயற்சி; 6 சிறுவர்கள் கைது
நெல்லை அருகே தொழிலாளியை கொல்ல முயன்றதாக 6 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை அருகே மேலபாலாமடை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் ராஜவல்லிபுரம் இந்திரா நகரில் உள்ள ஒரு வீட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சுவர் வெள்ளையடிக்கும் வேலைக்கு சென்றார். அப்போது ராஜவல்லிபுரத்தை சேர்ந்த 6 சிறுவர்கள் கூலி தொழிலாளியின் சாதி பெயரை சொல்லி அவரிடம் தகராறு செய்துள்ளனர். மேலும் தாங்கள் வைத்து இருந்த அரிவாளால் அந்த தொழிலாளியை வெட்டி கொலை செய்ய முயன்றனர். இதில் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய அந்த தொழிலாளி, இதுபற்றி தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த சிறுவர்கள் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.