பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி

பேரளம் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2022-08-16 16:53 GMT

நன்னிலம்;

பேரளம் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி

திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகேயுள்ள கடகம்பாடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது30). இவர் அதேபகுதியில் காய்கறி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் ் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது.

கைது

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வீட்டில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்து கூச்சலி்ட்டார். உடனே சம்பவ இடத்தில் இருந்து ரமேஷ்குமார் தப்பி ஓடி விட்டார்.இது குறித்து பேரளம் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்