மாணவர்கள் மீது தாக்குதல்

கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்ததற்கான கமிஷன் விவகாரத்தில் 2 மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.;

Update: 2023-10-24 20:05 GMT

தாரமங்கலம்:-

கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்ததற்கான கமிஷன் விவகாரத்தில் 2 மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

கல்லூரி மாணவர்கள்

தாரமங்கலம் அருகே கோணகப்பாடி அத்திக்கட்டானூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 19). இவர், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்வதற்கு அதே பகுதியை சேர்ந்த ஜெயசூர்யா என்பவர் உதவி செய்ததாக தெரிகிறது.

அதாவது, கல்லூரியில் சீட் வாங்கி கொடுத்ததாகவும், அதற்கு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக கேட்டதாகவும் தெரிகிறது. அந்த கமிஷன் தொகையை கொடுக்க மணிகண்டன் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

தாக்குதல்

இதற்கிடையே மணிகண்டனை, ஜெயசூர்யா, அவருடைய நண்பர் பிரேம் ஆகியோர் வழிமறித்து கமிஷன் தொகை குறித்து கேட்டதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் மணிகண்டனை தாக்கியதாகவும் தெரிகிறது. மணிகண்டனின் நண்பர் சிவப்பிரகாசும் இந்த சம்பவத்தில் தாக்கப்பட்டுள்ளார்.

காயம் அடைந்த 2 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தாரமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போலீசார் ஜெயபிரகாஷ், பிரேம் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்