தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல்

தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-08-19 19:17 GMT

நெல்லை பழைய பேட்டையை சேர்ந்தவர் தங்கசுப்பிரமணியன் (வயது 57). தனியார் பஸ் டிரைவர். இவர் நேற்று நெல்லை சந்திப்பில் இருந்து சிவந்திபட்டிக்கு பஸ்சை ஓட்டிசென்றார். அப்போது சிவந்திபட்டியில் பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது, அங்கு வந்த சிவந்திபட்டி கார்மேகனார் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற காக்கா சுப்பிரமணியன் (45) என்பவர் பஸ் டிரைவர் தங்கசுப்பிரமணியன் மற்றும் கண்டக்டரான கீழநத்தத்தை சேர்ந்த சுடலைமணி (23) ஆகியோரிடம் தகராறு செய்து கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்