நிலப்பிரச்சினையில் தாக்குதல்; தம்பதி மீது வழக்கு

நிலப்பிரச்சினையில் தாக்குதல்; தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது;

Update: 2023-02-10 19:07 GMT

தோகைமலை அருகே கம்பளியாம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி அம்பிகா (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (35). இவரது மனைவி சுசிலா (31). இவர்களது குடும்பத்தினருக்கு இடையே நில பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பழனிச்சாமி காலைக்கடனை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள முள்காட்டிற்கு சென்றுள்ளார். இதைக்கண்ட இளையராஜா-சுசிலா தம்பதி சேர்ந்து எங்கள் காட்டிற்குள் எப்படி செல்லலாம் என்று கூறி பழனிச்சாமியிடம் தகராறு செய்து அவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினர். இதில் அவர் காயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் இளையராஜா-சுசிலா தம்பதி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்