ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.;
மதுரை
மதுரை அவனியாபுரம் அருப்புக்கோட்டை சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிக்கு மர்மநபர்கள் அந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். திடீரென்று அங்கு அலாரம் ஒலித்ததால் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியை தவிர்த்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டனர். இதுகுறித்து வங்கி அதிகாரிகள் அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தனர். இதற்கிடையில் இரவு ேநர ரோந்தில் இருந்த கீரைத்துறை இன்ஸ்பெக்டர் பெத்துராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை ஆய்வு செய்தனர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.