சென்ட்ரல் வங்கி ஏ.டி.எம். மையம் தொடக்கம்

கீழப்பாவூரில் சென்ட்ரல் வங்கி ஏ.டி.எம். மையம் தொடக்க விழா நடந்தது;

Update: 2022-11-02 18:45 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூரில் சென்ட்ரல் வங்கி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஏ.டி.எம். மையம் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் பி.எம்.மருத்துவமனை நிறுவனர் பொன்கணேசன் தலைமை தாங்கி திறந்து வைத்தார். டாக்டர் கண்ணப்பன் முன்னிலை வைத்தார். சென்ட்ரல் வங்கி கீழப்பாவூர் கிளை மேலாளர் டப்பாஸ் மோண்டல் ஏ.டி.எம். எந்திரத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை மேலாளர் தங்கமுத்துமாரி மற்றும் அலுவலர்கள் சுப்பிரமணியன், செந்தில், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்