தடகள போட்டிகள்

மாணவ, மாணவிகளுக்கு தடகள போட்டிகள் நடந்தது.;

Update:2023-10-09 00:15 IST
தடகள போட்டிகள்

மாவட்ட அளவிலான மாணவ, மாணவிகளுக்கு தடகள போட்டிகள் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. போட்டியினை ராமநாதபுரம் ராஜா நாகேந்திர சேதுபதி, ராமேசுவரம் நகர் மன்ற தலைவர் நாசர்கான் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர். போட்டிகளில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். ராமநாதபுரம், கீழக்கரை, மண்டபம், திருவாடானை, பரமக்குடி, நயினார் கோவில், கமுதி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவிகள் கலந்து கொண்டனர். தடகளம், தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகளில் மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த தடகள போட்டியில் முதல் 2 இடங்கள் பெறுபவர்கள் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்