விழுப்புரத்தில்பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி

விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கான தடகள போட்டி நடைபெற்றது.

Update: 2023-08-06 18:45 GMT


விழுப்புரத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள போட்டி நடைபெற்றது. போட்டியை விழுப்புரம் மாவட்ட தடகள சங்கத்தின் தலைவர் புஷ்பராஜ், முன்னாள் நகர மன்ற தலைவர் ஜனகராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டுஎறிதல், 100 மீட்டர், 300 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பட்டை மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்