உடல் ஆரோக்கியம் குறித்து 62 சுற்றுகள் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய தடகள பயிற்சியாளர்

தூத்துக்குடியில் உடல் ஆரோக்கியம் குறித்து தடகள பயிற்சியாளர் 62 சுற்றுகள் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.;

Update: 2022-06-18 14:05 GMT

தூத்துக்குடியை சேர்ந்த தடகள பயிற்சியாளர் இமானுவேல். இவர் உடல் ஆரோக்கியம், இயற்கை உணவு உள்ளிட்டவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓடுவதற்கு முடிவு செய்தார். அதன்படி தூத்துக்குடியில் உள்ள தருவைகுளம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அவர் நேற்று 62 சுற்றுகள் ஓடினார். மொத்தம் 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு இடைவிடாமல் ஓடியபடி விழிப்புணர்வு ஏற்படுத்திய தடகள பயிற்சியாளர் இமானுவேலை பல்வேறு தரப்பினர் பாராட்டினர். பயிற்சியாளருடன், 7 வயது மாணவி உள்ளிட்ட 5 பேர் 62 சுற்றுகள் ஓடி சாதனை படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்