வில்லிசேரி கிராமத்தில் புதிய மின்மாற்றிகள் இயக்கி வைப்பு

வில்லிசேரி கிராமத்தில் புதிய மின்மாற்றிகள் இயக்கி வைக்கப்பட்டது.;

Update: 2022-11-29 18:45 GMT

கோவில்பட்டி:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பயிர்மான கழகம் சார்பில் வில்லிசேரி கிராமத்தில் சீரான மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.17.7 லட்சம் செலவில் புதிதாக 2 மின்மாற்றிகள் அமைக்கப்பட்டது. இந்த மின்மாற்றிகளை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய மின் மாற்றிகளை இயக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் தங்கராஜ், பொறியாளர்கள் பொன்ராஜா, முருகேசன், பஞ்சாயத்து தலைவர் வேலன், எட்டயபுரம் பேரூராட்சி செயலாளர் ராஜகுமார் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்