விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு

விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-10-27 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் ரெயில்வே இருப்பு பாதை போலீசார் சார்பில் விருத்தாசலம் ரெயில் நிலையத்தில் குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் போலீசார் ராதிகா, அருள்மொழி, மாணிக்கராஜ், காந்தி, தனிப்பிரிவு வெற்றிச்செல்வன் ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு, குழந்தை திருமணம், அதற்கான காரணம், குழந்தை திருமணத்தால் ஏற்படும் பின் விளைவுகள், குழந்தை திருமணம் குறித்து யார் யாரிடம் தகவல் தெரிவிக்கலாம், குழந்தை திருமணம் தடுப்பு சட்டம், குழந்தை திருமணம் ஆனவர்களை மீட்பது மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் எடுத்தல், போக்சோ சட்டம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம், சிறு குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் குழந்தை திருமணம் நடந்தால் உடனடியாக 1098 என்ற சைல்டு லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு இலவச தொலைபேசி சேவையில் தகவல் தெரிவிக்கலாம், பெண்கள் பாதுகாப்பிற்கு 181, ரெயில்வே காவல்துறை அவசர உதவிக்கு 1512 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் இதுகுறித்த துண்டுபிரசுரங்களும் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்