விஜயமங்கலத்தில் அவல நிலையில் கிடக்கும் பஸ் நிறுத்த நிழற்குடை

விஜயமங்கலத்தில் அவல நிலையில் பஸ் நிறுத்த நிழற்குடை கிடக்கிறது.

Update: 2023-07-27 22:33 GMT

முன்னாள் அமைச்சரும், தி.மு.க. பிரமுகருமான தோப்பு என்.டி.வெங்கடாசலம் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவுக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

பெருந்துறை தொகுதிக்குட்பட்ட விஜயமங்கலம் பஸ் நிறுத்தம் பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. நான் பெருந்துறை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து அமைச்சராக இருந்த காலத்தில், இங்கு நிழற்குடை வேண்டும் என்று பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கோரிக்கை விடுத்ததன் பேரில், ரூ.7 லட்சம் செலவில் இந்த நிழற்குடையை அழகிய முறையில் அமைத்துக்கொடுத்தேன். மாணவ-மாணவிகள் மட்டுமின்றி அனைத்து பொதுமக்களுக்கும் இந்த நிழற்குடை வெயில், மழை காலத்தில் பயன் உள்ளதாக இருந்தது.

தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக அழகிய வடிவ நிழற்குடைகளை நான் அமைச்சராக இருந்தபோது பெருந்துறை தொகுதியில் அறிமுகப்படுத்தினேன். அதுமட்டுமின்றி எனது பதவிக்காலம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு பணியும் செய்தேன். ஆனால் தற்போது பராமரிப்பு இல்லாமல் அவல நிலையில் உள்ளது. இருக்கைகள் பெயர்ந்து ஒரு இடத்தில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. எனவே நிழற்குடையில் இருக்கை வசதி ஏற்படுத்தவும், பராமரிப்பு செய்யவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்