உத்தமபாளையம் பஸ் நிலையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதி

உத்தமபாளையத்தில் நடைபாதை ஆக்கிரமிப்பால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2023-05-07 18:45 GMT

தேனி மாவட்டத்தில் அதிக அளவில் மக்கள் தொகை கொண்ட பேரூராட்சியாக உத்தமபாளையம் உள்ளது. அங்குள்ள பஸ் நிலையத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 30-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு அவை வாடகைக்கு விடப்பட்டுள்ளன. அந்த கடைகள் முன்பு பொதுமக்கள் மற்றும் பயணிகள் சென்று வர நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த பாதையை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் பயணிகள் அவதி அடைகின்றனர். நடைபாதைகளின் குறுக்கே தகரம் போட்டு அடைத்துள்ளனர். தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் ஒதுங்கி நிற்பதுக்குகூட இடம் இன்றி தவிக்கும் நிலை உள்ளது.

இதேபோல் பஸ் நிலையம் முன்பும் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும். பஸ் நிலைய பகுதியில் ஆட்டோ நிறுத்தங்களை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்