திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது.

Update: 2022-09-16 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு வரவேற்பு மற்றும் திறமை விழா சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு விழா கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கி, விழாவை தொடங்கி வைத்து பேசினார். மாணவி பேரவை தலைவி செ.சுஜிதா வரவேற்றார். 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவிகளின் தனி நடனம், குழு நடனம், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலாம் ஆண்டு மாணவிகள், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் திறமை திருவிழா நடந்தது. இளைஞர் நலத்துறை மாணவ செயலாளர் ஐஸ்வர்யா வரவேற்றார். மாணவி முத்துமாரி நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி, மாணவிகள் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் க.சுதா, ரா.கோமதி மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

மேலும், திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கணித மன்ற கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி வழிகாட்டுதல்படி நடந்த கூட்டத்துக்கு பொருளியல் துறை தலைவர் மா.சண்முகவள்ளி தலைமை தாங்கினார். கணிதவியல் துறை 3-ம் ஆண்டு மாணவி ஞா.புஷ்பராணி வரவேற்று பேசினார். போப்ஸ் கல்லூரி கணிதவியல் துறை உதவி பேராசிரியை சுகந்தா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, இயற்கணிதம் மற்றும் பகுப்பாய்வு பற்றிய அடிப்படை கருத்துகள் என்ற தலைப்பில் பேசினார். கூட்டத்தில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகள் கலந்து கொண்டனர். இளங்கலை 2-ம் ஆண்டு மாணவி ரா.வி.சுமதியா ராஜலட்சமி நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை பேராசிரியைகள் தி.தங்கம், மா.கலைச்செல்வி, ஜெ.வெங்கடேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்