திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.;
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் உறுதிமொழியை படித்தார். அலுவலக கண்காணிப்பாளர் பெ.பொன்துரை, கல்லூரி அலுவலர்கள், மாணவர்கள் திரளாக கலந்துகொண்டு தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
இதேபோன்று கல்லூரியில் உள்ள அனைத்து வகுப்பறைகளிலும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகளும் உறுதிெமாழி எடுத்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணியின் திட்ட அலுவலர்கள் பே.மருதையா பாண்டியன், இ.அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும், கல்லூரி வேதியியல் துறை சார்பில் 'மேம்படுத்தப்பட்ட வேதியியல் பொருட்களும் அதன் பயன்பாடுகளும்' என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலாளர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். இதில் தென்கொரியாவின் போஸ்டேக் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் எஸ்.வீரபாண்டியன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, நம்அன்றாட வாழ்விலும், ஆய்வகங்களிலும் மேம்படுத்தப்பட்ட வேதிப் பொருட்களின் பயன்பாடு குறித்து விளக்கி பேசினர். கல்லூரி வேதியியல் துறை தலைவர் செ.கவிதா கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராகவும், பேராசிரியர்கள் ஜெஸிந்த் மிஸ்பா, தீபாராணி, அபுல்கலாம் ஆஷாத், கோடிஸ்பதி, ராம்தாஸ் ஆகியோரும் கருத்தரங்கை நடத்தினர். இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆய்வு மாணவர்கள் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் கல்லூரி பல்வேறு துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டன்.