திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்இருபெரும் விழா

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இருபெரும் விழா நடைபெற்றது.;

Update: 2023-08-10 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக 77-வது சுதந்திர தினவிழா, சமூக நல்லிணக்க விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் மருதையா பாண்டியன் வரவேற்று பேசினார். தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை சு.விஜயாகலைவாணி, ஆதித்தனார் கல்லூரி பொருளியில் துறை தலைவர் வ.மாலைசூடும் பெருமாள் ஆகிய 2பேரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழ் இலக்கியங்கள் வாயிலாக மாணவர்களுக்கு சமூக நல்லிணக்கத்தை விளக்கி பேசினர். இவ்விழாவில் பேராசிரியர்கள் கணேசன், சிவமுருகன், உமாஜெயந்தி, அந்தோணி பிரைட் ராஜா மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முதல்வரின் ஆலோசனைப்படி பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் மருதையா பாண்டியன் மற்றும் முதுகலை பொருளியல் துறை மாணவர்களும் செய்திருந்தனர். மாணவர் பா.செல்வம் நன்றி கூறினார்.

மேலும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் யோகா மன்ஹம், ஐ.கியூ.ஏ.சி. சார்பில் மாணவர்களுக்கு, 'நல்வாழ்வுக்கான வாழ்வியல் பயிற்சி' 3 நாட்கள் யோகா பயிற்சி பட்டறை தொடக்க விழா நடந்தது. இந்த விழாவுக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். விலங்கியல்துறை தலைவர் வசுமதி வரவேற்று பேசினார். ஈசா யோகா பயிற்றுனர் வினோத் குமார், யோகா பயிற்சி கொடுத்தார். விழாவிற்கு ஐ.கியூ.ஏ.சி.ஒருங்கிணைப்பாளர் ஜீம்ரீவ்ஸ் சைலண்ட் நைட், தாவரவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன், வேதியியல் துறைதலைவர் கவிதா, பேராசிரியை தீபாராணி, பேராசிரியர் கார்த்திகா தொகுத்து வழங்கினார். இதில் 3-ம் ஆண்டு விலங்கியல் மற்றும் வேதியியல் துறை மாணவர்கள் பங்குபெற்று பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் யோகா மன்ற இயக்குனர் ஆரோக்கியமேரி பர்னாந்தஸ் மற்றும் இணை இயக்குனர் லிங்கதுரை ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்