தூத்துக்குடியில்உப்பள கழிவுநீர் கால்வாயில்விழுந்த வாலிபர் சாவு

தூத்துக்குடியில்உப்பள கழிவுநீர் கால்வாயில் விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்து போனார்.

Update: 2023-10-22 18:45 GMT

தூத்துக்குடி டி.சவேரியார்புரத்தை சேர்ந்தவர் காளீசுவரன் (வயது 23). மாற்றுத்திறனாளி. இவர் நேற்று முன்தினம் சிலுவைப்பட்டியில் உள்ள ஒரு உப்பளம் அருகே சென்ற போது, எதிர்பாராத விதமாக தடுமாறி உப்பளத்தில் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்து உள்ளார். இதில் மூழ்கிய காளீசுவரன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்