தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில்மேலும் ஒரு மாதம் ரெயில் நிற்காது

தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் மேலும் ஒரு மாதம் ரெயில் நிற்காது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

Update: 2023-05-02 18:45 GMT

தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் மேலும் ஒரு மாதம் ரெயில்கள் நிற்காது என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.

இரட்டை ரெயில் பாதை

மதுரை- தூத்துக்குடி இடையிலான இரட்டை ரெயில் பாதை பணிகள் மீளவிட்டான் முதல் தூத்துக்குடி ரெயில் நிலையம் வரை தண்டவாளங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த பணியில் தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையமானது புதிய பஸ் நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்படுகிறது.

அங்கு ரெயில்கள் நின்று செல்லும் வகையில் மேலூர் ரெயில் நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால் மேலூர் ரெயில் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது.

நிற்காது

ரெயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க ரெயில்வே நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த பணிகளை விரைவுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பணிகளை விரைவுப்படுத்துவதற்கு வசதியாக தூத்துக்குடி மேலூர் ரெயில் நிலையத்தில் இந்த மாதம் (மே) 30-ந் தேதி வரை சென்னை- தூத்துக்குடி-சென்னை விரைவு ரெயிலும், இந்த மாதம் 31-ந் தேதி வரை, மைசூர்-தூத்துக்குடி-மைசூர் ரெயில், நெல்லை-தூத்துக்குடி-நெல்லை ஆகிய பயணிகள் ரெயில்கள் நிற்காது.

இந்த தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்