தேனி கோர்ட்டில் இலவச கண் சிகிச்சை முகாம்
தேனி கோர்ட்டில் இலவச கண் சிகிச்ைச முகாம் நடந்தது;
தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள சட்டப்பணிகள் ஆணைக்குழு கட்டிடத்தில் தேனி வக்கீல் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சஞ்சய் பாபா தொடங்கி வைத்து பரிசோதனை செய்து கொண்டார். தொடர்ந்து முகாமில் 100-க்கும் மேற்பட்ட வக்கீல்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை தேனி வக்கீல் சங்க தலைவர் சந்தானகிருஷ்ணன், செயலாளர் செல்வகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்