வல்லநாடு வனச்சரக அலுவலகத்தில்பணியாளர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம்

வல்லநாடு வனச்சரக அலுவலகத்தில் பணியாளர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2023-10-15 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

வல்லநாடு வனச்சரக அலுவலத்தில் ஸ்ரீவைகுண்டம் வனச்சரக பணியாளர்களுக்கு அடிப்படை முதலுதவி பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு, மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமை தாங்கினார். ஸ்ரீவைகுண்டம் வனச்சரக அலுவலர் பிருந்தா, வனவிரிவாக்க வனச்சரக அலுவலர் சங்கரன், ஊர்வன ஆராய்ச்சியாளர் ரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி, ஏட்டு மந்திரமூர்த்தி ஆகியோர் தலைமையிலான தீயணைப்புப்படை வீரர்கள் அரிகரபாலன், சங்கர், சங்கரலிங்கம், பழனி, மணிகண்டன் ஆகியோர் அடிப்படை முதலுதவிகள் குறித்தும், தீயணைப்பு கருவிகளை பயன்படுத்துவது குறித்தும் பயிற்சி அளித்தனர். இதில், வனச்சரக அலுவலர்கள் தூத்துக்குடி சுப்பிரமணியன், திருச்செந்செந்தூர் கனிமொழிஅரசு, விளாத்திக்குளம் கவின், கோவில்பட்டி மணிமாறன் மற்றும் வனக்காவலர்கள், வனப்பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்