உடன்குடி அரசு கிளைநூலகத்தில் வாசிப்பு திறன் பயிற்சி
உடன்குடி அரசு கிளைநூலகத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.
உடன்குடி:
உடன்குடி கிளைநூலகத்தில் தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு ் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 25பேர் உறுப்பினர்களாக சேர்க்கபட்டனர். மேலும் அந்த மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு திறன் பயிற்சி அளிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவ மாணவிகளும் தினமும் ஒரு மணி நேரம் அருகில் உள்ள நூலகத்திற்கு சென்று நூல்களை வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது இவ்விழாவில் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் தலைமைஆசிரியர் அதிசயராணி, நூலகர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.