கம்பம் உழவர் சந்தையில்மண்புழு உரம் தயாரிப்பு குறித்து பயிற்சி

கம்பம் உழவர் சந்தையில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update: 2023-01-22 18:45 GMT

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாய பணிகள், விவசாய இடுபொருள் ஆய்வு மற்றும் உரம் தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். அதன்படி, நேற்று கம்பம் உழவர் சந்தையில் காய்கறி கழிவுகளை கொண்டு மண்புழு உரம் தயாரிப்பது குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் பயிற்சி அளித்தனர். இதில் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் பார்த்திபன், கம்பம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர் மோகன்ராஜ் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்