போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 30 பவுன் நகை-ரூ.3 லட்சம் கொள்ளை
ஸ்ரீவில்லிபுத்தூரில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை திருடி சென்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் 30 பவுன் நகை, ரூ.3 லட்சத்தை திருடி சென்றனர்.
சப்-இன்ஸ்பெக்டா்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ் காந்தி நகரில் வசிப்பவர் கோமதி நாயக கண்ணன். இவர் 11-வது போலீஸ் பட்டாலியன் பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
சிவராத்திரியை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் கோவிலுக்கு சென்று விட்டார். இரவு முழுவதும் கோவிலில் இருந்து விட்டு நேற்று அதிகாலையில் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கோமதி நாயக கண்ணன், வீட்டிற்கு சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது.
30 பவுன் நகை
பீரோவில் இருந்த 30 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம், வெள்ளி பாத்திரங்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்யும் படி துணை போலீஸ் சூப்பிரண்டு சபரிநாதன் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை மற்றும் பணம் கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.