தாப்பாத்தி, சிந்தலக்கரையில்சமுதாய நலக்கூடம், கலையரங்கம்கட்டுவதற்கு பூமிபூஜை
தாப்பாத்தி, சிந்தலக்கரையில் சமுதாய நலக்கூடம், கலையரங்கம் கட்டுவதற்கு பூமிபூஜை நடந்தது.;
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம், சிந்தலக்கரையில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பூமி பூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி ஜீ.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.விழாவில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தம்பிரான் தோழன், உதவி செயற் பொறியாளர் கங்கா பரமேஸ்வரி, கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஷ்குமார், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தாப்பாத்தி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளம்மாள் பால்பாண்டி, தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், நவநீத கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து எட்டயபுரம் புது அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு நேற்று மதியம் அன்னதானம் நடந்தது அன்னதானத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் இதில் எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் மற்றும் விழா கமிட்டியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.