சாகுபுரம் தொழிற்சாலையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
சாகுபுரம் தொழிற்சாலையில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது.;
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டத்தின் 36-வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு சாகுபுரம் டி. சி. டபிள்யூ தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. ஆலையின் மூத்த செயல் உதவி தலைவர் ஜி. ஸ்ரீனிவாசன் தலைமையேற்று தொழிற்சாலை வளாகத்திற்குள் மரக்கன்றை நட்டி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவரது துணைவியார் நந்தினி சீனிவாசன், தொழிற்சாலை உதவி தலைவர் சுரேஷ், மற்றும் உயர் அதிகாரிகள், அலுவலர்கள், தொழிலாளர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தொழிற்சாலை சுற்றுச்சூழல் துறை, சிவில் துறை, மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரிகள் செய்திருந்தனர்.