நந்தகோபாலபுரத்தில்முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா
நந்தகோபாலபுரத்தில் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது.;
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே உள்ள நந்தகோபாலபுரம் முத்துமாலை அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். விழாவில் சப்பரபவனி மற்றும் அம்மனுக்கு விசேஷ பூஜைகளும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.