மதுரை ஆட்டோ டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை - ஆவணங்கள் பறிமுதல்

மதுரை ஆட்டோ டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை செய்து, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-12-15 20:44 GMT


மதுரை ஆட்டோ டிரைவர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை செய்து, கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

மதுரை ஆட்டோ டிரைவர் கைது

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமையினர் கடந்த செப்டம்பர் மாதம் சோதனை மேற்கொண்டனர். அதை தொடர்ந்து சில அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை நெல்பேட்டை சுங்கம்பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் உமர்ஷெரிப் (வயது 42), ஆட்டோ டிரைவர். இவர் உள்ளிட்ட 5 பேருக்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தனர். அவர்களை சென்னையில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஏற்கனவே விசாரித்த நிலையில், உமர்ஷெரிப்பை நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆயுதங்கள் பறிமுதல்

இதற்கிடையில் தேசிய புலனாய்வு முகமை இன்ஸ்பெக்டர் அருள்மகேஷ் தலைமையில் அதிகாரிகள் சிலர், நேற்று காலை உமர்ஷெரிப்பை அழைத்து கொண்டு மதுரை வந்தனர். அவரது வீட்டிற்கு அழைத்து சென்று திடீர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 4 மணி நேரம் நடத்திய சோதனையின் முடிவில் அவரது வீட்டிலிருந்து பெரிய வாள், கத்தி, சுருள்பட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பின்னர் உமர்ஷெரிப்பை விமானத்தில் சென்னை அழைத்து சென்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்