கும்பகோணம் ரெயில் நிலையத்தில்போலீசார் சோதனை

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கும்பகோணம் ெரயில் நிலையத்தில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர்.;

Update: 2023-08-13 21:17 GMT

கும்பகோணம்:

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கும்பகோணம் ெரயில் நிலையத்தில் போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர்.

சுதந்திர தின விழா

சுதந்திர தின விழாவையொட்டி திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் ஆகியோர் மேற்பார்வையில் கும்பகோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையில் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் சோதனை பணியில் ஈடுபட்டனர்.

ரெயில் நிலையத்திறகு வந்த பயணிகளின் உடைமைகளை சோதனை செய்தனர்.பின்னர் கும்பகோணம் வழியாக செல்லும் அனைத்து ெரயில்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சோதனை

இதுகுறித்து ெரயில்வே போலீசார்கள் கூறியதாவது:-

சுதந்திர தின விழாவை முன்னிட்டு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க 24 மணி நேரமும் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு ெரயில் நிலையம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ெரயில்வே நிலையத்திற்கு கொண்டுவரப்படும் பார்சல்கள், ெரயில்வே நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் பார்சல் உள்ளிட்ட அனைத்தும் நவீன கருவிகள் மூலம் சோதனை செய்யப்படுகின்றன. இந்த சோதனைக்கு பயணிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்