கோவில்பட்டி நாடார் காமராஜ் பதின்ம பள்ளியில்மாணவர்களுக்குவைட்டமின் சொட்டு மருந்து வழங்கல

கோவில்பட்டி நாடார் காமராஜ் பதின்ம பள்ளியில் மாணவர்களுக்குவைட்டமின் சொட்டு மருந்து வழங்கப்பட்டது.

Update: 2023-09-22 18:45 GMT

கோவில்பட்டி(கிழக்கு):

கோவில்பட்டி நாடார் காமராஜ் பதின்ம பள்ளியில் மாணவ, மாணவியருக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில்பட்டி ஊரணி தெரு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் செவிலியர் ராஜேஸ்வரி பள்ளியிலுள்ள 5 வயதிற்கு உட்பட்ட 150-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ சொட்டு மருந்தை பள்ளி முதல்வர் பிரபு முன்னிலையில் வழங்கினார். இதில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்