கோவில்பட்டி நாடார் மேல்நிலை பள்ளியில்மாணவர்களுக்கு பேச்சு போட்டி
கோவில்பட்டி நாடார் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடந்தது.
கோவில்பட்டி (கிழக்கு):
கோவில்பட்டி நாடார் மேல்நிலை பள்ளியில் தகவல் அறியும் உரிமை சட்டம் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடைபெற்றது. பேச்சுப் போட்டியில் மாணவன் ஹரிகிருஷ்ணன் முதலிடமும், விஜயலட்சுமி இரண்டாமிடமும், சஞ்ஜெய்குமார் மூன்றாமிடமும் பெற்றனர். கட்டுரைப் போட்டியில் மாரி ஆனந்த செல்வி முதலிடமும், முத்தமிழ் இரண்டாமிடமும், இலக்கியா மூன்றாம் இடமும் பெற்றனர்.
பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ் தலைமை தாங்கினார். கோவில்பட்டி தாசில்தார் லெனின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். தமிழாசிரியர் செல்வம் வரவேற்று பேசினார். ஆசிரியர் முத்து கணேஷ் நன்றி கூறினார்.