கோவில்பட்டிஅரசு மருத்துவ மனையில் தொழுநோய் தடுப்பு முகாம்

கோவில்பட்டிஅரசு மருத்துவ மனையில் தொழுநோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2022-09-09 11:30 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் தொழுநோய் ஊனத்தடுப்பு சிகிச்சை முகாம் நடந்தது. முகாமிற்கு தூத்துக்குடி மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் டாக்டர் யமுனா தலைமை தாங்கினார். முகாமில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவி களை பெற்றனர். இம்முகாமில் மாவட்ட நலக்கல்வியாளர் முத்துக்குமார், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் நியூட்டன், சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் மற்றும் ஆய்வக நுட்பனர் பாலன் ஆகியோர் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் செண்பகமூர்த்தி செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்