கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில்தற்காலிக தினசரி சந்தை

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் தற்காலிக தினசரி சந்தை வியாழக்கிழமை முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-01-23 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் ராஜாராம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோவில்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான பசும்பொன் உ. முத்துராம லிங்கத்தேவர் தினசரிச்சந்தையில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழைய கடைகளை இடித்துவிட்டு, ரூ 6.87 கோடியில் புதிய கடைகள் கட்டும் பணி வருகிற பிப். 2-ல் தொடங்கப்பட உள்ளது. இந்த கட்டுமானப் பணிகள் முடியும் வரை, கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தில் நாளைமறுநாள் (வியாழக்கிழமை) முதல் தற்காலிக தினசரி சந்தை செயல்படும் இதை பொதுமக்கள், வியாபாரிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்