கொடுமுடி, பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில்ரூ.67¾ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம்

கொடுமுடி, பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.67¾ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.

Update: 2023-05-24 20:51 GMT

கொடுமுடி, பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.67¾ லட்சத்துக்கு விவசாய விளைபொருட்கள் ஏலம் போனது.

கொப்பரை தேங்காய்

சாலைப்புதூரில் உள்ள கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய விவசாய விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 14 ஆயிரத்து 924 தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இது குறைந்தபட்ச விலையாக கிலோ ஒன்று ரூ.17.15-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.23.05-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 430-க்கு விற்பனை ஆனது.

விவசாயிகள் 407 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் முதல் தரம் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.73.39-க்கும், அதிகபட்ச விலையாக கிலோ ஒன்று ரூ.81.19-க்கும், 2-ம் தரம் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச விலையாக ரூ.60.92-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.77.06-க்கும் என மொத்தம் ரூ.13 லட்சத்து 21 ஆயிரத்து 43-க்கு விற்பனை செய்யப்பட்டது.

எள்

325 மூட்டைகளில் எள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.134.42-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.148.99-க் கும் என மொத்தம் ரூ.33 லட்சத்து 79 ஆயிரத்து 236-க்கு விற்கப்பட்டது.

விவசாயிகள் 461 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது கிலோ ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.71.69-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.80.90-க்கும் என மொத்தம் ரூ.11 லட்சத்து 84 ஆயிரத்து 441-க்கு விற்பனை ஆனது.

அம்மாபேட்டை

இதேபோல் அம்மாபேட்டையை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்துக்கு 6 ஆயிரத்து 784 தேங்காய்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் சிறிய தேங்காய் ரூ.8.89-க்கும், பெரிய தேங்காய் ரூ.14.14-க்கும் என மொத்தம் ரூ.58 ஆயிரத்து 715-க்கு விற்பனை செய்யப்பட்டது. 73 மூட்டைகளில் கொப்பரை தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 889-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.8 ஆயிரத்து 516-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 561-க்கு விற்கப்பட்டது.

நிலக்கடலை 140 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக மாக ரூ.7 ஆயிரத்து 212-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 715-க்கும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 56ஆயிரத்து 419-க்கு விற்பனை ஆனது.

41 மூட்டைகளில் நெல்லை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 262-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 ஆயிரத்து 540-க்கும் என மொத்தம் ரூ.72 ஆயிரத்து 946-க்கு விற்பனை செய்யப்பட்டது.

எள் 14 மூட்டைகளில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது. இது குவிண்டால் ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.13 ஆயிரத்து 849-க்கும் அதிகபட்ச விலையாக ரூ.15 ஆயிரத்து 279-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 398-க்கு விற்கப்பட்டது.

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.7 லட்சத்து 76 ஆயிரத்து 39-க்கு விற்கப்பட்டது.

கொடுமுடி, பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் விவசாய விளைபொருட்கள் மொத்தம் ரூ.67 லட்சத்து 68 ஆயிரத்து 189-க்கு ஏலம் போனது. 

Tags:    

மேலும் செய்திகள்