புகழ்சோழர் நாயனார் குருபூஜை விழா

கரூரில், புகழ்சோழர் நாயனார் குருபூஜை விழா நடைபெற்றது.

Update: 2022-07-23 18:24 GMT

கரூர் ஈஸ்வரன் கோவிலில் உள்ள புகழ்சோழர் நாயனாருக்கு ஆண்டுதோறும் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் குருபூஜை விழா நடந்தது. இதையடுத்து புகழ்சோழருக்கு பால், பழம், சந்தனம் உள்பட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை புகழ்சோழர் நாயனார் கமிட்டியினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்