காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா
குலசேகரன்பட்டினம் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா நடைபெற்றது.
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனித் திருவிழா நேற்று நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு காரைக்கால் அம்மையார் பேயுருவம் பெற்று அற்புதத் திருவந்தாதி பாடிய மண்டபம் அமைந்துள்ள தலத்தில் மாங்கனிகள் படைத்து சிறப்பு வழிபாடுகள், தீபாராதனை, பக்தர்களுக்கு மாங்கனி வழங்கல் நடைபெற்றது. இதில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இவ்விழாவை முன்னிட்டு அருள்தரும் அறம் வளர்த்த நாயகி ஊடனுறை காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரர் கோவிலில் காலை 10 மணிக்கு நெல்லை திருவுருமாமலை பன்னிரு திருமுறை வழிபாட்டுக் குழுவினரால் காரைக்காலம்மையார் பாடிய பதிகங்கள் திருமுறைப் பாராயணம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகேஸ்வர பூஜை, மழை வளம் செழிக்க மழைப் பதிகங்கள் பாடப்பட்டது.