கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் பொதுவினியோகத்திட்ட குறைதீர் முகாம்
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் பொதுவினியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற்றது.;
கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் உள்ள குடிமைப்பொருள் தனிதாசில்தார் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் குறைதீர் முகாம் குடிமைப்பொருள் தாசில்தார் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் மின்னனு குடும்ப அட்டையில் முகவரி திருத்தம், பெயர் சேர்த்தல், நீக்குதல், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 37 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இந்த மனுக்கள் மீது உரிய தீர்வு காணப்பட்டு அனைவருக்கும் அதற்கான நகல் வழங்கப்பட்டது.