கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில்திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ஆய்வு
கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அபிநவ்குமார் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான ஆவணங்களை பார்வையிட்டார். அதன்பின்னர் போலீஸ் நிலையம் அருகே அமைந்துள்ள காவலர்கள் குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்தார்.
அப்போது குடியிருப்புகளுக்கு செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் தொடர்பாக கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அப்போது தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, ஆண்டிபட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன், ராமசாமி, ஜோதிகண்ணன், ரெங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.