ஈரோட்டில் உள்ள குடோனில் 340 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கிய 2 பேர் கைது

ஈரோட்டில் உள்ள குடோனில் 340 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கிய 2 பேரை போலீசாா் கைது செய்தனா்.;

Update: 2023-10-10 21:53 GMT

ஈரோடு பிருந்தா வீதியில் உள்ள ஒரு குடோனில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ஈரோடு டவுன் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது விற்பனைக்காக புகையிலை பொருட்கள் பண்டல், பண்டலாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதைத்தொடர்ந்து புகையிலை பொருட்களை பதுக்கி வைத்ததாக ஈரோடு பெரியநாயகி வீதியை சேர்ந்த சென்ராமின் மகன் போலராம் (வயது 23), பெருந்துறை வேளாளர் தெருவை சேர்ந்த தினேஷ் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மொத்தம் 340 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்