ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு

ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

Update: 2022-10-28 21:55 GMT

ஈரோடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்தது.

காய்கறிகள் கிடுகிடு உயர்வு

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஊட்டி, பெங்களூரு, தாளவாடி, ஒட்டன்சத்திரம், மேச்சேரி போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது முகூர்த்த நாட்கள், கோவில்களில் விசேஷ நாட்கள் தொடர்ந்து வருவதால் காய்கறிகள் தேவை அதிகரித்து உள்ளது.

இதனால் கேரட், பீன்ஸ், கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் விலை கடந்த வாரத்தை விட கிலோவுக்கு ரூ.60 வரை உயர்ந்துள்ளது. கடந்த வாரம் கேரட் மற்றும் பீன்ஸ் ஒரு கிலோ ரூ.60 வரை விற்பனையானது. இந்த நிலையில் கிடுகிடுவென விலை உயர்ந்து நேற்று ஒரு கிலோ கேரட் மற்றும் பீன்ஸ் ரூ.120-க்கு விற்பனையானது.

விலை விவரம்

இதைபோல் கடந்த வாரம் ரூ.40-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கத்தரிக்காய் நேற்று ரூ.100-க்கு விற்பனையானது. இதனால் கிலோ கணக்கில் காய்கறிகளை வாங்கி வந்த பொதுமக்கள் நேற்று ¼ கிலோ, ½ கிலோ என வாங்கிச்சென்றனர்.

ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட்டில் நேற்று விற்பனையான மற்ற காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

பீர்க்கங்காய் - ரூ.70, பாகற்காய் - ரூ.50, கருப்பு அவரை - ரூ.110, பட்டை அவரை - ரூ.70, சுரைக்காய் - ரூ.20, பச்சை மிளகாய் - ரூ.50, முட்டைகோஸ் - ரூ.50, காலிபிளவர் - ரூ.40, முருங்கைக்காய்-ரூ.120, வெண்டைக்காய் - ரூ.40, முள்ளங்கி - ரூ.50, பீட்ரூட் - ரூ.80, சின்ன வெங்காயம் - ரூ.80, பெரிய வெங்காயம் - ரூ.45, தக்காளி - ரூ.30.

Tags:    

மேலும் செய்திகள்