கோட்டூர் தேர்வு மையத்தில்தமிழ் சுருக்கெழுத்து தேர்வு
கோட்டூரில் தமிழ் சுருக்கெழுத்து தேர்வு நடந்தது.
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் சார்பில், தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்த தேர்வுகள் கடந்த 12-ந் தேதி தமிழகத்தில் தொடங்கியது. தேனி மாவட்டத்தில் சுருக்கெழுத்து தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு கோட்டூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது.
இந்த தேர்வு மையத்தில் தமிழ் சுருக்கெழுத்து தேர்வு நேற்று நடந்தது. இந்த தேர்வு எழுத 196 பேர் ஹால்டிக்கெட் பெற்றிருந்தனர். அவர்களில் 193 பேர் நேற்று தேர்வு எழுதினர். தேர்வு கண்காணிப்பு பணி அலுவலர்கள் தேர்வு அறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதே மையத்தில் ஆங்கில சுருக்கெழுத்து தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.