சேர்வைக்காரன்மடத்தில்இலவச தோல்நோய் சிகிச்சை முகாம்

சேர்வைக்காரன்மடத்தில் இலவச தோல்நோய் சிகிச்சை முகாம் நடந்தது.;

Update: 2023-02-05 18:45 GMT

தூத்துக்குடி அருகே உள்ள சேர்வைக்காரன் மடம் டி.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் முடிவைத்தானேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச தோல்நோய் சிகிச்சை முகாம் நடந்தது. முகாமுக்கு சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து தலைவர் ஜெபக்கனி தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் தூத்துக்குடி மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய்) டாக்டர் யமுனா கலந்து கொண்டு சிகிச்சை அளித்தார். முகாமில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர்.

முகாமில் சேர்வைக்காரன்மடம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஞானசேகர், நலக்கல்வியாளர் முத்துகுமார், மருத்துவமல்லா மேற்பார்வையாள் ஜான்ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் மந்திரமூர்த்தி, இளங்கோவன், ஆய்வக நுட்பனர் பாலன், கிராம சுகாதார செவிலியர் ஐசாஜெபா உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை மருத்துவமல்லா மேற்பார்வையாளர் மதிவாணன், மக்களை தேடி மருத்துவ பணியாளர் சாந்தி ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்