பண்டாரஞ்செட்டிவிளை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கூடுகை விழா
பண்டாரஞ்செட்டிவிளை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் கூடுகை விழா நடைபெற்றது.
உடன்குடி:
பண்டாரஞ்செட்டிவிளை தூய லூக்கா ஆலயத்தில் ஜான்தாமஸ் சபை மன்ற அளவிலான கிறிஸ்துமஸ் கூடுகை விழா நடைபெற்றது.
சபைமன்ற தலைவர் அண்ட்ரூஸ் நவராஜ் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற குருவானவர் ஏட்வின்ஜெபராஜ் ஆரம்ப ஜெபம் செய்து விழாவைத் தொடங்கி வைத்தார். லூர்துராஜ் ஜெயசிங் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினார். நாடு, மக்கள், வறுமை ஒழிய, ஒற்றுமை வளர நடந்த இந்த விழாவில் சபை மக்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சபை குரு ஜான்சாமுவேல் செய்திருந்தார்.