ஆத்தூரில்பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ஆத்தூரில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.;
ஆறுமுகநேரி:
ஆத்தூர் அரசு மேல்நிலை பள்ளி சார்பில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் கமால்தீன் தலைமை தாங்கினார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்து, சிவக்குமார், பள்ளி தலைமை ஆசிரியை அன்னலட்சுமி, ஆசிரியர்கள், மாணவ மாணவியர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை சென்றடைந்தது.