ஆத்திகுளம் கிராமத்தில்காளியம்மன் கோவில் கொடைவிழா

ஆத்திகுளம் கிராமத்தில் காளியம்மன் கோவில் கொடைவிழா நடந்தது.

Update: 2023-01-06 18:45 GMT

கயத்தாறு:

கயத்தாறு அருகேயுள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து ஆத்திகுளம் கிராமத்தில் காளியம்மன் கோவில் கொடை விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் கோவிலில் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேலைகளும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. எட்டாம் நாளான நேற்று அதிகாலையில் அம்பாளுக்கு பூ அலங்கார பூஜை நடந்தது. காலை 11 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தல், மொட்டை போடுதல், காது குத்தல், பொங்கல் இடுதல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபாடு நடத்தினர். மேலும், பக்தர் ஒருவர் பறவைகாவடி எடுத்து ஆடினார். இந்த பறவை காவடி எடுத்த பாக்தர், பிள்ளையார் கோவில் முன்பு தொடங்கி, முக்கியவீதிகள் வழியாக காளியம்மன் கோவில் வரை சென்று நேர்த்திக்கடனை செலுத்தினார். தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்