ஏரல் தாமிபரணி ஆற்றுப்பாலம் பகுதியில்வாலிபரிடம் பணம், பொருட்கள் வழிப்பறி;சிறுவன் உள்பட 4 பேர் சிக்கினர
ஏரல் தாமிபரணி ஆற்றுப்பாலம் பகுதியில் வாலிபரிடம் பணம், பொருட்கள் வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 4 பேர் சிக்கினர்;
ஏரல்:
ஏரலில் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த வாலிபரை தாக்கி பணம், பொருட்களை வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பணம், பொருட்கள் வழிப்பறி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வென்றிலிங்கபுரம் ஊரைச் சேர்ந்த ராமர் மகன் கிருஷ்ணமுத்து சிவா (வயது 26). சம்பவத்தன்று இவர் ஏரலில் உள்ள ஒரு கோவிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளார். இந்த நிலையில் அன்று இரவு தாமிரபரணி ஆற்று பாலம் அருகே சென்றபோது, 4 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்த செல்போன் இடுப்பில் கட்டியிருந்த வெள்ளிக்கொடி மற்றும் மணிப்பர்சை பறித்துக் கொண்டு சென்று விட்டனர். இது குறித்த அவர் கொடுத்த புகாரின் பேரில்ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
4பேர் கைது
விசாரணையில் அவரிடம், குரும்பூர் சொக்கப்பலன்கரையை சேர்ந்த சிவபெருமாள் மகன் முத்துதினேஷ் (23), ஏரல் மருந்துபாண்டி மகன் சுபாஷ் (29), ஏரலை அடுத்துள்ள சிறுத்தொண்டநல்லூரை சேர்ந்த ஜாகிர்ஹூசைன் மகன் முகமது ஷபின் (23) மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த சிறுவன் உள்பட 4 பேரை என தெரிய வந்தது. இதை தொடர்ந்து அந்த 4 பேரையும் ஏரல் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன், வெள்ளி கொடி மற்றும் மணிபர்சை மீட்டனர்.