ஆலந்தலை தேவாலயத்தில்கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி

ஆலந்தலை தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது.;

Update: 2022-12-25 18:45 GMT

திருச்செந்தூர்:

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் அருகே ஆலந்தலையில் உள்ள இயேசுவின் திருஇருதய அற்புத கெபி தேவாலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடந்தது. திருத்தல பங்கு தந்தை ஜெயக்குமார் தலைமையில் உதவி பங்குதந்தை பாலன், திருத்தொண்டர்கள் பாக்கியபவுல், சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு பெருவிழா திருப்பலியை சிறப்பித்தனர். திருப்பலி நிறைவுற்ற பின்னர் பங்குதந்தை கிறிஸ்மஸ் கேக் வெட்டி, ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கினார். இதில் திரளான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜெயக்குமார் தலைமையில் திரு இருதய சபையினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்